கடும் மழை: கிளிநொச்சியில் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின – மக்கள் பெரும் அவதி!

Thursday, November 8th, 2018

தொடர்ச்சியாக பெய்த கடும்  மழை காரணமாக  கிளிநொச்சி நகரின் இரத்தினபுரம், ஆனந்தபுரம் கிழக்கு கிராமங்களின் ஒரு பகுதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி கனகாம்பிகை குளம் வான்பாய்ந்து வருகின்றமையால் கிளிநாச்சி ஆனந்தபுரம் கிழக்கும் மற்றும் இரத்தினபுரம் கிராமங்களின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் அந்தப் பகுதிகளில் வாழ்கின்ற பொது மக்கள் கடும்  சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

அந்த வகையில் கிளிநொச்சி ஆனந்தபுரம் கிழக்கில் 25 குடும்ங்களைச் சேர்ந்த 77 பேரும்  இரத்தினபுரம் கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களுகம்  வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களின் வீடுகளுக்கு  வெள்ளம்  சென்றமையினால் நேற்றிரவு(07) முதல் பெரும்  சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.  சீரான வடிகாலமைப்பு வசதிகள் இன்மையால் வெள்ள  நீர் வழிந்தோட  முடியாத நிலையில்  இவ்வாறு பாதிப்புக்கள் ஏற்படுகின்றன  பொது மக்கள்  தெரிவிக்கின்றனர்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 11 குடும்பங்களை செர்ந்த 57 பேருக்கான உடனடி உணவுகள் கிளிநொச்சியில் உள்ள படையினர் வழங்கியுள்ளனர. இந்நிலையில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

DSC08900 DSC08890 DSC08884 DSC08876

Related posts: