கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் வலியுறுத்து!

Monday, August 9th, 2021

கடுமையான பயணக் கட்டுப்பாடுகள் விரைவில் மீண்டும் விதிக்கப்பட வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.

நாட்டின் நிலைமை தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

அதேநேரம் பயணக் கட்டுப்பாடுகள் தற்போது அமுலில் இருந்தாலும் தொற்று பரவல் அபாயத்தைக் கட்டுப்படுத்த முடியுமா என்பது குறித்து இன்னும் சிக்கல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: