கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படலாம் – சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்து!

Tuesday, September 7th, 2021

கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.

நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்தால், குறைந்த வழிகாட்டுதலின் கீழ் பாடசாலைகளை திறந்து பராமரிக்க முடியும்.

ஆனால் தற்போதைய நிலை அவ்வாறு இல்லை. ஆகவே கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களின் கீழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்.

அத்துடன் சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் இதில் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதை தாமதப்படுத்துவதற்கு அவசியமில்லை என்றும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் கூறியுள்ளார்.

இதேநேரம் எதிர்காலத்தில் பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்றால், இப்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் திட்டமிட வேண்டும்.

மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்வது தொடர்பில் நாம் எப்படித் திட்டமிடுகிறோம், பாடசாலைக்கு பேருந்துகளை எப்படி கட்டுப்படுத்துகிறோம், குழந்தைகளை பாடசாலைக்கு வரும்போது எப்படி வகுப்பறைகளில் வைத்திருக்கிறோம் என்பதை ஆராய வேண்டும்.

நமக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருந்ததால், கடந்த காலங்களில் கடுமையான நோய்களை எதிர்கொண்டாலும், நாங்கள் பாடசாலைகளை நடத்த அனுமதித்தோம் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: