கடுமையான சுகாதார நடைமுறைகளுடன் வழமைக்கு திரும்பியது குடாநாட்டின் பொதுச் சந்தைகள்!

Monday, June 1st, 2020

“கொரோனாவைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் முகமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 11 ஆம் திகதி நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் முடக்கநிலை தளர்த்தப்பட்டதால் யாழ்ப்பாண மாவட்டமும் படிப்படியாக வழமைக்கு திரும்பி வருகிறது.

இந்நிலையில் மாவட்ட அரசாங்க அதிபர் மகேசனின் அறிவுறுத்தலுக்கமைவாக குடாநாட்டில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் இன்றையதினம் மீள திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் கடந்த 70 நாட்களின் பின்னர் இன்றையதினம் யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தை  உள்ளிட்ட அனைத்து சந்தைகளும் மீள வழமைக்குத் திரும்பியுள்ளன.

குறிப்பாக திருநெல்வேலி பொதுச்சந்தை இன்று அதிகாலை 5 மணிமுதல் சந்தை திறக்கப்பட்டு சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் சந்தை நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

நல்லூர் பிரதேச சபையினரால் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறானஏற்பாடுகள் ஏற்கனவே ஒழுங்குசெய்யப்பட்டது. பொலிசார் மற்றும் இராணுவத்தினர் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அரச நிறுவனங்களில் நிரந்தர வேலை: பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளாட்சி அமைச்சின் தீ...
அரசாங்கத்தின் செயற்பாடுகளை சீர்குலைப்பதே எதிர்க்கட்சியின் நோக்கம் : பழைய நாடாளுமன்றத்தை கூட்டி பணத்த...
தேர்தலை நடத்தக்கூடிய சூழல் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தல் நடத்தப்படும் - மாகாணசபைத் தேர்த...