கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் பேருந்து சேவைகள் முன்னெடுப்பு – இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர்!

அத்தியாவசிய பயணிகளுக்காக கடுமையான சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டு இன்றையதினம் பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம் சகல மாகாணங்களிலும் வழமை போன்று பேருந்து சேவைகள் இடம்பெறும் என்றும் தேரிவித்துள்ள அவர் தொழில் நடவடிக்கைகளுக்கு செல்பவர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாகாணங்களுக்கு இடையில் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்றையதினம் தொடருந்து சேவைகள் இடம்பெறமாட்டாது என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். பயணிகளின் நலன்கருதி மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி நாளை இலங்கைக்கு வருகை : மலையகத்தின் வீதிகள் புனரமைப்பு!
வாள்வெட்டு குழுவை மடக்கிப் பிடித்த இளைஞர்கள்!
இலங்கையின் கடற்கரையோரங்களை சுத்தப்படுத்த சிங்கப்பூரிடமிருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் டொலர் பெறுமதிய...
|
|