கடுமையாக போராடி வருகின்றோம் – வைத்தியர்கள்!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க தாம் கடுமையாக போராடி வருவதாக இலங்கை சுகாதார சேவையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோயை கட்டுப்படுத்த அனைவரும் வீட்டில் இருக்க வேண்டியது அவசியமாகும் என அவர்கள் கோரியுள்ளனர்.
நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளது. எவரும் வெளியில் வர வேண்டாம்.
நாட்டு மக்களின் நன்மைக்காக நாங்கள் பணிக்கு வருகின்றோம். எங்களுக்காக நீங்கள் வீட்டில் இருங்கள் என வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்கள் குடும்பங்களையும் மறந்து நாட்டுக்காக இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
Related posts:
சுசந்திகா முன்வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்த விளையாட்டுத்துதறை அமைச்சர்
ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது - வனஜீவராசிகள் திணைக்களம்!
பயங்கரவாதத்தைக் கையாளும் போது மனித உரிமைகள் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையே ஒரு நியாயமா...
|
|