கடவுளை சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை – யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி !

Wednesday, April 4th, 2018

கடவுளுக்கு காது நல்ல கூர்மை. அதனால் சத்தமாக வழிபட வேண்டிய தேவை இல்லை இவ்வாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார்.

மத வழிபாட்டுத் தலங்களில் வழிபாடுகளில் ஈடுபடுவோர் அதிக சத்தத்தை எழுப்பி வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர் என்றும் அதனால் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது என்றும் நாயன்மார்கட்டைச் சேர்ந்த ஒருவர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அதிகாலையில் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மத வழிபாட்டு இடத்தில் கூடுவோர்கள் அதிக சத்தம் எழுப்பி வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். இதயநோய் உள்ள நான் அதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றேன் என்று தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அதன்போதே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது:

எங்கள் உரிமை மத வழிபாட்டு உரிமை என்பது மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்கக்கூடாது.

தற்போது ஆலயங்களில் ஒலி பெருக்கி பாவனைகள் கணிசமான அளவு குறைந்து உள்ளது. கடவுளை அமைதியாக மற்றவர்களுக்கு மற்ற மதத்தினருக்கு இடையூறு விளைவிக்காத வகையில் வணங்குங்கள் என்றார். விசாரணைகளின் பின் வழக்கு அடுத்த மாதம் 30 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related posts: