கடவுச்சீட்டை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகளவு வீழ்ச்சி!

Thursday, June 25th, 2020

வெளிநாட்டு பயணம் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால், கடவுச்சீட்டுகளுக்காக குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களத்தால் பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 200 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கொரோனா பரவலுக்கு முன்னர் ஒரு நாள் சேவையின் கீழ், தினசரி 1,000 க்கும் மேற்பட்டவர்கள் கடவுச்சீட்டினை பெறுவதற்காக திணைக்களத்திற்கு வருகைத்தந்தனர்.

எனினும், தற்போது இலங்கையர்கள் வெளிநாட்டு பயணம் செய்ய ஆர்வம் காட்டவில்லை. இதனால் தற்போதைய நிலைமை எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது

இதனிடையே, வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதற்கு இதுவரை வசதிகள் இல்லாமையினால், சுற்றுலா பயணிகளின் வரவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்து.

Related posts: