கடவுச்சீட்டு மோசடி – தொடர்ந்தும் பலர் கைது!

Friday, May 26th, 2023

கடவுச்சீட்டு கொள்வனவு மோசடி தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடவுச்சீட்டு கொள்வனவு மோசடி தொடர்பில், குடிவரவு திணைக்களத்திற்கு அருகில் இடம்பெற்று வரும் நிதி மோசடிகள் தொடர்பில் அண்மையில் பெரிதாக ஊடகங்களில் பேசப்பட்டு வந்தன.

இதனையடுத்து, விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதுடன், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் இச்சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தவர்களிடம் தரகர்கள் போல் காட்டி பணம் பறித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இந்த சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.

வரிசையில் காத்திருக்காமல் நிர்ணயிக்கப்பட்ட முறைக்கு புறம்பாக கடவுச்சீட்டை பெற்றுத்தருவதாக சந்தேகநபர்கள் தலா 25,000 ரூபா வசூலித்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts:

பிரதமர் தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் கட்சி தலைவர்கள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்து...
நாட்டின் பல பாகங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
எரிபொருள் விலை பாரியளவில் குறைப்பு - இடையூறு விழைவித்த 20 ஊழியர்களுக்கு பெற்றோலிய கூட்டுத்தாபன வளாகத...