கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகரிக்கலாம்!

Wednesday, July 18th, 2018

நாட்டில் மற்றும் நாட்டைச் சுற்றியுள்ள கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டினுள் சில பிரதேசங்களில் 50 முதல் 60 கிலோமீற்றர் வரை காற்றின் வேகம் அதிகரித்து வீசக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பகுதிகளில் 50 மில்லி மீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Related posts: