கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் உண்மைக் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. யாழ் மாவட்ட செயலகம் தகவல்!

Sunday, November 1st, 2020

யாழில் கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எனினும் உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என யாழ் செயலகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடல் நீர் உட்புகுந்த சம்பவம் யாழ் கல்லுண்டாய், ஊர்காவற்துறை, குருநகர், நாவாந்துறை பிரதேசத்தில் உணரப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத்திற்கு தகவல் கிடைத்திருந்தது. அதனை உடனடியாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினருக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட்டது.

கல்லுண்டாய் பகுதி உட்பட யாழ் மாவட்ட கரையோர பகுதிகள் சிலவற்றில் இந்த கடல் நீர் உட்புகுதல் அவதானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கின்ற உவர் நீர் கட்டுகள் சேதமடைந்ததன் காரணமாகவும் நீர் உட்புகுந்திருந்திருக்கலாம் அப்பகுதி மக்கள் இது தொடர்பில் தகவல் தெரிவிக்கையில், இது ஒரு புதிதான விடயமாக காணப்படுகிறது. தங்களுக்கு ஒரு புதிதான அனுபவமாக அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். ஆகவே இந்த விடயம் பற்றி அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் மாவட்ட செயலகம் குறிப்பிட்டுள்ளது.

அப்பகுதி மக்கள் கூறியதன் படி முழு போயா தினத்திற்கும் இவ்வாறான இயற்கையான செயற்பாடு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இருந்த போதிலும் இது பற்றி தொடர்ச்சியாக ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடல் நீர் உட்புகுந்தமை தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனினும் இதற்கு உண்மையான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் எமக்கும் ஒரு புதிய விடயமாக காணப்படுகிறது. இது தொடர்பில் நாங்கள் அனர்த்த முகாமைத்து நிலையத்தினரிடம் அறிவிக்கப்பட்டள்ளது.

வடக்கு மாகாணத்தில் இவ்வாறான சம்பவம் யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக உணரப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவு விரிவாக ஆராய்ந்து வருவதாகவும் மாவட்ட செயலகம் மேலும் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Related posts: