கடல் கொந்தளிக்கலாம் : கரையோர பகுதி மக்களே எச்சரிக்கை!

Sunday, May 15th, 2016
இலங்கையை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற தன்மை தொடர்ந்தும் வலுப்பெற்று வருவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதனால் நாடு முழுவதிலும் இதன் தாக்கம் அதிகரித்து காணப்படும் என காலநிலை அவதான நிலையம்  மேலும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நாட்டின் கடற்பிரதேசங்களில் காற்றின் வேகம் 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளதுடன் இதனால் கடல் கொந்தளிப்பானது சற்று அதிகரித்து இருக்கும் என தெரிவித்துள்ளது.

இதேவேளை, அசாதாரண காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பல பகுதிகளில் அதிக பனிமூட்டம் படர்ந்துள்ளதாகவும் ஹப்புத்தளை, பெரகல, அடம்பிட்டிய, மடுல்சீமை, ஆகிய பகுதிகளிலேயே அதிக பனிமூட்டம் நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Related posts: