கடல் எல்லைக்குள் அத்துமீறிய 29 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் 29 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் கடற்பரப்பில் இன்று (06) அதிகாலை இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்துள்ளார்.
தலைமன்னார் வடக்கு கடற்பகுதியில் ஒரு ட்ரோலர் படகுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக கெப்டன் அக்ரம் அலவி தெரிவித்தார்.
அத்துடன் மேலும் 3 சிறுமீன்பிடி படகுகளுடன் தலைமன்னார் தென்பகுதியில் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களை கற்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
கொரோனா தொற்று: இதுவரை 35 ஆயிரத்திற்கும் அதிகமான பீ.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு!
பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சார்த்திகள் ஒன்லைன் ஊடாக கோருவதற்கு பரீட...
இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலை எதிர்த்து, கறுப்புக்கொடி போராட்டம் – இலங்கை - இந்திய எல்லை வரை ச...
|
|