கடல் அலை அதிகரிப்பு; யாழ்ப்பாணத்தில் மக்கள் அச்சம்!
Sunday, November 12th, 2017
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு கடல் நீர்மட்டம் வழமையை விடவும் உயர்ந்தமையினால் மக்கள் மத்தியில் அச்சமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணத்தின் கோப்பாய் மற்றும் முல்லைத்தீவின் சில பகுதிகளில் கடல் மட்டம் வழமையை விடவும் ஐந்து அடி உயரத்திற்கு மேலெழுந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோப்பாய் பிரதேச பகுதியிலுள்ள நீர் மட்டம் 4.5 அடி உயிரத்திற்கும் முல்லைத்தீவு கடல் மட்டம் 5 அடி உயரத்திற்கும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுனாமி அனர்த்தம் ஏற்படலாம் என அந்தப் பகுதி மக்கள் பதற்றம் அடைந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடல் மட்டம் தீடீரென அதிகரித்துள்ளமையினால் அதனை பார்வையிடுவதற்காக அந்த பகுதி மக்கள் கடலுக்கு அருகில் சென்றுள்ளனர்.
எனினும் தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொள்ள தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய உதவி இயக்குனர் பிரதிப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|