கடல் அட்டைகளை பிடித்தவர்கள் கைது!

Saturday, July 16th, 2016

வடபகுதி கடலில் அனுமதிப் பத்திரம் பெறாமல் கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டைதீவு முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதில் 18 கடல் அட்டைகள் மற்றும் கடலுக்குள் மூழ்கி சுழியோடும் உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை கைப்பற்றிய உபகரணங்களுடன் யாழ்ப்பாணம் மீன்பிடி விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்

Related posts: