கடல்சார் உற்பத்திகளின் ஏற்றுமதி மூலம் இலங்கைக்கு 120 கோடி ரூபா!
Wednesday, January 18th, 2017கடல்சார் உற்பத்திகளின் ஏற்றுமதி மூலம் 120 கோடி ரூபாவை இலங்கை கடந்த ஆண்டில் வருமானமாக பெற்றுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டில் மீன் ஏற்றுமதியின் மூலம் கிடைத்துள்ள வருமானம் அதிகரிப்பை பதிவு செய்திருக்கிறது. நண்டு இறால் கடல் நத்தை கடல் அட்டை போன்ற கடல்சார் உற்பத்திகளுக்கு சர்வதேச மட்டத்தில் நிலவும் கிராக்கி இந்த அதிகரிப்பிற்கான காரணமாகும்.
கடற்றொழில் மற்றும் நீரியியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டது. இதே வேளை 2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இது சிறிய அளவிலான சரிவாகும் என சுட்டிக்காட்டப்பட்டது.
சர்வதேச சந்தையில் இலங்கையின் கடல்சார் உற்பத்திகளுக்கு கூடுதல் கிராக்கி நிலவினாலும் மொத்த கிராக்கியில் இரண்டில் ஒரு பகுதியை மாத்திரமே ஏற்றுமதி செய்ய முடிந்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீக்கியதன் பின்னர் நாட்டின் கடல்சார் உற்பத்திகளின் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது. இலங்கையின் மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையினால் நாட்டிற்கு ஆயிரத்து 800 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர இதன் போது சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|