கடலுணவுகள், மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மாவட்டங்களுக்கிடையில் கொண்டு செல்வதற்கு போக்குவத்து அனுமதி அவசியமில்லை!

Thursday, November 5th, 2020

கடலுணவுகள், மரக்கறி வகைகள் உட்பட அத்தியாவசிய பொருட்களை மாவட்டங்களுக்கிடையில் கொண்டு செல்வதற்கு போக்குவத்து அனுமதி அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், ஊரடங்குச் சட்டம் அமுலப்படுத்தப்பட்டள்ள பிரதேங்களில் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னரும் சுய தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் சரியான முறையில் பின்பற்றப்படுகின்றதா என்பதை அவதானிக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதியினால் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: