கடலுக்கு சென்ற 7 மீனவர்கள் மாயம்!

Saturday, July 7th, 2018

காலி மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடற்தொழிலுக்கு சென்ற 07 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக மீடியாகொட காவற்துறைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

கடந்த மாதம் 14ஆம் திகதி இவர்கள் கடற்தொழிலுக்காக சென்றிருந்த நிலையில் இதுவரை கரை திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஹிக்கடுவை, தெல்வத்த, தெடகமுவ பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: