கடலுக்கு சென்ற இருவரைக் காணவில்லை – பருத்தித்துறையில் சம்பவம்!
Thursday, May 18th, 2017பருத்தித்துறை கடலில் தொழிலுக்காக சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் இதுவரை கரை திரும்பவல்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்
நேற்று முன்தினம் பருத்தித்துறை கடலில் கடற்றொழிலுக்காகச் சென்ற யோகராசா கலியுகவரதன் வயது 29 மற்றும் பாலசூரியமூர்த்தி பிரதீபன் ஆகிய இருவருமே இதுவரை கரைதிரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக இவர்கள் கடலலையுடன் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுவதுடன் குறித்த இருவரும் இதுவரை கரைக்கு திரும்பவில்லை என பருத்தித்துறை பொலிஸாரிடமும் கடற்படையினரிடமும் அவர்களது உறவினர்களால் முறையிடப்பட்டுள்ளது.
நேந்றையதினமும் இன்றும் தொடர்ச்சியான அவ்விருவரையும் கடற்றொழிலாளர்கள் படகுகள் மூலம் தேடுதல் நடத்தியும் இதுவரை அவர்களை கண்டபிடிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் நாய்களின் தொல்லை அதிகம்!
அரைவாசி கட்டணத்தையே அறவிட தீர்மானம் - அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் தெர...
மன்னராட்சியின் பின் இதுவே முதல் தடவை - செங்கடல் பாதுகாக்கப்படாவிட்டால் இலங்கையின் துறைமுகங்கள் பாரிய...
|
|