கடலுக்கு அடியில் பாரிய எரிமலை வெடிப்பு: டொங்கா – நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை!

Saturday, January 15th, 2022

கடலுக்கு அடியில் ஏற்பட்ட பாரிய எரிமலை வெடிப்பு காரணமாக  டொங்கா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

டொங்காவிலுள்ள பல வீடுகள் உள்ளிட்ட கட்டட தொகுதிகளுக்குள் கடல் நீர் நுழையும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அந்த நாட்டு தலைநகரில் கடலில் இருந்து சாம்பல் வெளியேறுவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசுபிக் தீவுகளில் வாழ்பவர்களை உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க சமோவா பகுதிக்கும் அமெரிக்கா ஆழிப்பேரலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

Related posts: