கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமற்போன தந்தை, மகன் சடலங்களாக மீட்பு!

மன்னார் சவுத்பார் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமற்போன தந்தை மற்றும் மகன் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் நேற்றிரவு 7 மணியளவில் மீன்பிடிக்காக கடலுக்கு சென்ற நிலையில் திரும்பி வராததால், உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் பயணித்த படகு கடற்பரப்பில் கவிழ்ந்திருந்தமை அவதானிக்கப்பட்டதுடன் அதனைத் தொடர்ந்து காணாமற்போன இருவரையும் தேடும் பணிகள் கடற்படையினரின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இதன்போது தந்தை மற்றும் மகன் இருவரும் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். காலை 09 மணியளிவில் மகனின் சடலம் மீட்கப்பட்டதுடன், தந்தையின் சடலம் பிற்பகல் 2 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.
மன்னார், சவுத்பார் பகுதியை சேர்ந்த 47 வயதுடைய அந்தோனிபிள்ளை ஜெஸ்மன் மற்றும் 9 வயதுடைய பாடசாலை மாணவன் ஜெஸ்மன் ஜெக்ஸன் ஆகியோரே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
Related posts:
|
|