கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தரத்திற்கும் நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல்!
Monday, March 7th, 2022இலங்கையின் கடற்றொழில் செயற்பாடுகளை சர்வதேச தொழிலாளர் தரத்திற்கும் சர்வதேச நியமங்களுக்கும் ஏற்ற வகையில் மாற்றியமைப்பதன் மூலம் கடற்றொழில் சார்ந்து வாழும் தொழிலாளர்களின் நலன்களையும், பாதுகாப்பான எதிர்காலத்தினையும் உத்தரவாதப்படுத்துவற்கான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகரவின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
ஐ.எல்.ஓ. எனப்படும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு, தொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் அமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கலந்துரையாடலில், ஐ. எல். ஓ. அமைப்பினரின் பரிந்துரைகள் மற்றும் இலங்கை கடற்றொழிலாளர்களின் தொழில் முறை தொடர்பான அவதானிப்புக்கள் ஆகியற்றின் அடிப்படையில் கருத்துக்கள் பகிரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
குடாநாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவித தீர்மானமும் எடுக்கப்படவில்லை - மக்கள் குழப்பமடைய தேவையில்லை ...
இம்மாதம் 21 ஆம் திகதி இலங்கை வாழ் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாள்!
கொழும்புக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்தது ஜசீரா எயார்வேஸ்!
|
|