கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் படகொன்று நீரில் மூழ்கி விபத்து!
Wednesday, September 4th, 2024யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட கடற்றொழிலாளர்களின் படகொன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் மாதகலில் இருந்து இன்று(04) அதிகாலை இரண்டு இளைஞர்கள் கடற்றொழிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் அவர்கள் பயணித்த படகு திடீரென நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானது.
இதன்போது குறித்த படகில் இருந்த ஒருவர் நீந்திக்கொண்டிருந்த வேளை அருகே வந்த மற்றொரு படகின் உதவியுடன் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பாக கரை சேர்ந்ததுடன், மற்றைய இளைஞன் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து அவரை தேடும் நடவடிக்கைகளில் கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து ஈடுபட்டு வருகின்றனர்
000
Related posts:
இருதய அறுவை சிகிச்சைகள் பாதிப்பு!
சிங்கப்பூரிலிருந்து சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட பறவைகளுடன் ஒருவர் கைது!
பொதுப் போக்குவரத்து சேவையிலீபடும் ஊழியர்களது சுகாதார வசதிகளை மேம்படுத்த உடன் நடவடிக்கை – அதிகாரிகளுக...
|
|