கடற்றொழிலாளர் சம்மேளனம் அதிரடி: போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற மாவை M.P. துரத்தப்பட்டார்!

Monday, June 11th, 2018

வடமராட்சி கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத கடலட்டை தொழில் முறையை உடனடியாக நிறுத்தக் கோரியும் அங்கு குறித்த தொழிலில் ஈடுபட்டுவரும்  தொழிலாளர்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி  இன்றையதினம் யாழ்ப்பாணம் கடற்றொழிலாளர் சமாசத்தினரால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணம் சின்னக்கடைப் பகுதியில் அமைந்துள்ள குறித்த சமாசத்தினரின் தலைமை அலுவலகத்திற்கு முன்னால் இந்த போராட்டம் நடைபெறுகின்றது.

இதில் பலதரப்பட்ட கட்சிகளதும் பிரதிநிதிகள் கலந்துகொண்டு குறித்த மீனவர் சமாசத்தின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராசா குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ள வருகைதந்திருந்தபோது அவரை தடுத்து நிறுத்திய போராட்டக்காரர்கள் மத்திய அரசுக்கு முண்டுகொடுத்துக்கொண்டு இங்கு எங்களை ஏமாற்ற வருகை தரவேண்டாம்,   எம்மை இனியும் ஏமாற்ற முடியாது உடனடியாக வெளியேறுங்கள் எனப் பலவாறு கூறி வெளியேற்றப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

போராட்டக்காரர்களது எதிர்ப்பை அடுத்து உண்மை முகம் வெளிக்கொண்டு வரப்பட்டுவிட்டது என உணர்ந்த மாவை சேனாதிராசா உடனடியாக அவ்விடத்ததை விட்டு அகன்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: