கடற்றொழிலாளர்களின் வீடுகள் மறுசீரமைப்பு – கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை!

Tuesday, May 23rd, 2017

கடற்றொழிலாளர்களின் வீடுகளை மறுசீரமைப்பதற்காக 10 மாவட்டங்களில் குடும்பம் ஒன்றுக்கு தலா 3 இலட்சம் ரூபா வீதம் நிதி வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பான ஆரம்ப வைபவம் கல்பிட்டி – உச்சமுனி கிராமத்தில் இடம்பெற்றது. குச்சவெளி சஹஸ்புர கிராமத்தில் முதல் கட்ட நடவடிக்கையின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 100 வீடுகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கடற்றொழிலாளர்களின் புனரமைப்பதற்கான திட்டத்தை முன்னெடுப்பதற்காக 3ஆயிரம் மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: