கடற்படை ஒத்துழைப்பு: நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள்!

கொரோனா வைரசு தொற்றைக்கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள தேவேளைத்திட்டங்களின் கீழ் அத்தியாவசிய உணவு மற்றும் வீட்டுப் பொருட்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, சதொச விற்பனை நிலையங்கள் மூலம் நயினாதீவு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் திட்டமொன்றும் இடம்பெற்றுவருகிறது.
இத்திட்டத்தை செயல்படுத்த தேவையான கடல் போக்குவரத்து வசதிகள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியல் டி சில்வாவின் உத்தரவின் கீழ் கடற்படை பிரதித் தலைமை அதிகாரி மற்றும் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீரவின் மேற்பார்வையின் கீழ் வடக்கு கடறப்படை வீரர்களால் கடல் மூலமான பயண வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் நயினாதீவுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களைக்கொண்டு செல்ல இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|