கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழப்பு

Tuesday, April 19th, 2016

அகுரஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 18.04.2016 அன்று மாலை திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக அகுரஸ்ஸ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர் புத்தாண்டு விடுமுறையின் பின்னர் சேவைக்கு வருகை தந்துள்ள முதலாவது நாளிலேயே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

வீரரத்ன எனும் பெயரையுடைய இவர், திடீரென ஏற்பட்ட இருதய நோயின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 27 வருடங்கள் பொலிஸில் சேவையாற்றியுள்ளார் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

Related posts: