கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் – வட மாகாண ஆளுநர் கடுமையான உத்தரவு!

Tuesday, June 28th, 2022

வடக்கில் தமது கடமைகள் நிமித்தம் எரிபொருளைப் பெற்ற அரச உத்தியோகத்தர்கள் தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற செல்ல வேண்டும் என வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கடுமையாக உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் அத்தியாவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் கரிசனையாக உள்ளதோடு அவர்களுக்கான எரிபொருளை தடையின்றி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தமது கடமைகளை காரணம் காட்டி எரிபொருளை பெற்றவர்கள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: