கடமைகளுக்கு சமுகமளிக்கமாறு கல்விசாரா ஊழியர்களிடம் கோரிக்கை!

நாடளாவிய ரீதியாக உள்ள பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வி சாரா ஊழியர்கள் அனைவரும் இன்று கடமைக்கு சமுகமளிக்க வேண்டியது கட்டாயம் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்துள்ளது.
பயிற்சியில் உள்ளவர்கள் மற்றும் தகுதிகான் காலப்பகுதியில் உள்ள ஊழியர்கள் இன்று கடமைக்கு திரும்பாத பட்சத்தில் அவர்கள் வேலையில் இருந்து தானாகவே விலகியதாக கருதப்படுவர் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாட்டில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கண் பார்வையில்லை!
எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கை – இந்திய மீனவர்கள் புதுடில்லியில் பேச்சுவார்த்தை!
இலங்கை மருத்துவ சபைக்கு சட்ட ஆலோசனை!
|
|