கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது!

அரச சேவையாளர்களை வழமைப்போன்று கடமைகளுக்கு அழைப்பதற்கான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ள போதிலும், அது ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்படுகின்றது.
அரச நிறுவனங்கள் நாளைமறுதினம்முதல் வழமைப்போன்று இயங்கவுள்ளன. எனினும் பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டிருப்பதால், குறித்த சுற்றுநிருபம் ஆசிரியர்களுக்கு தாக்கம் செலுத்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீள திறப்பதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.
அவ்வாறான அனுமதிகள் வழங்கப்பட்டால் ஆசிரியர்களை பணிக்கு அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
160 மில்லியன் டொலர்களுக்கும் மேற்பட்ட கடன் தொகைக்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரம்!
பேருந்துகளுக்கான கட்டண திருத்தம் ஜுனில்!
முடக்கல் நிலையால் சாதகமான விளைவுகள் - சில வாரங்களில் உயிரிழப்புகள் குறைவடையும் என மருத்துவ தொழில்நுட...
|
|