கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழையுங்கள் – நிறுவனத் தலைவர்களிடம் இராணுவத்தளபதி வலியுறுத்து!

Thursday, August 12th, 2021

நிறுவனங்களில் கடமைகளுக்குத் தேவையான ஊழியர்களை மட்டும் அழைக்குமாறு நிறுவனத் தலைவர்களிடம் ஒரு சிறப்பு வேண்டுகோள் விடுப்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்..

மேலும், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் விருந்துபசாரங்களில் கலந்து கொள்ளாவேண்டாம் என்றும் இராணுவத் தளபதி மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்த நேரத்தில் நாட்டில் ஊரடங்கு விதிப்பது பற்றி நாம் பேசக்கூடாது. நாடு மூடப்படாத வகையில் வேலை செய்வது அனைத்து குடிமக்களின் பொறுப்பாகும் என்றும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம் நாட்டை மூட வேண்டாம் என்று பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்த அவர் மக்கள் சுகாதாரச் சட்டங்களை பின்பற்றுவது அசவியம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Related posts: