கடன் வழங்கும் போது பேரம் பேசப் படுதின்றதா ? – ஆராய்கிறார் மத்தி வங்கியின் ஆளுனர்!

Monday, April 2nd, 2018

பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வழங்கும் போது பேரம் பேசப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து தாம் ஆராய்வதாக மத்தி வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமார சுவாமி தெரிவித்துள்ளார்.

தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இவ்வாறான குற்றச் சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.  அவற்றிற்கு பதிலளித்த போதே மத்திய வங்கியின் அளுநர் மேற் குறித்தவாறு குறிப்பிட்டார்

கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து முன்வைக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களை செவிமடுத்த ஆளுநர் மத்திய வங்கியின் கீழ் வரும் கடன் வழங்கலின் போது இடம் பெறும் மோசடிகளை தடுக்க உரிய சடவடிக்கை எடுப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்

Related posts: