கடன் மறுசீரமைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்து சீன ஜனாதிபதியுடன் தொலைபேசி உரையாடலுக்கு தயாராகின்றார் ஜனாதிபதி ரணில்!

Monday, February 6th, 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று கோரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்போது, இலங்கை கடன் மறுசீரமைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளின் எதிர்காலம் குறித்து ஜி ஜின்பிங்குடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் என்பனவே இலங்கைக்கு இருதரப்பு கடன் வழங்கும் நாடுகளாகும். இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்துடன் 2.9 பில்லியன் டொலர்கள் திட்டத்தை பெற்றுக்கொள்ள இந்த நாடுகளின் உத்தரவாதங்கள் முக்கியமாகும்.

இந்தியாவும் ஏற்கனவே 10 வருடக்கால கடன் இரத்து மற்றும் 15 வருட மறுசீரமைப்புக்கு உடன்பட்டுள்ளது. இதனை சர்வதேச நாணய நிதியமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஜப்பானும் இதேயளவான இணக்கத்துக்கு வரும் என்று எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. எவ்வாறாயினும், சீனா, 2 வருடக்கால கடன் இரத்தை மாத்திரம் அறிவித்துள்ளது. இது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு போதாது என்ற கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

இதனையடுத்தே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீன ஜனாதிபதியுடன் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்றுக்கு தயாராவதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: