கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இம்மாதத்தில் அறிவிக்க திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!

Thursday, May 4th, 2023

நாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பான திட்ட வரைவு இந்த மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஏப்ரல் மாதத்தில் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அறிவிப்பது மற்றும் கடன் வழங்குநர்களுடன் பேச்சுக்களை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

இருப்பினும் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை முதலீட்டாளர்களுக்கு வெளியிடுவதை மே மாத நடுப்பகுதிக்கு இலங்கை அரசாங்கம் பின்தள்ளியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: