கடன் தொடர்பில் ஆலோசனை குழு நியமிக்க 3 வார அவகாசம் தேவை – வரியை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை – நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Friday, April 22nd, 2022

நாட்டின் கடன் தொடர்பில் ஆலோசனைகளை வழங்கும் குழுவினை நியமிக்க மூன்று வாரங்கள் கால அவகாசம் தேவை என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிதி நிலைமை மற்றும் கடன் தொடர்பில் அலோசனை வழங்குவதற்கான குழுக்களை நியமிப்பதற்கு குறைந்தபட்சம 10-15 நாட்கள் அவகாசம் தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி என்பனவற்றிடமிருந்து எதிர்வரும் ஆறு மாத காலத்திற்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கிடைக்கப் பெறும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தற்போதைய வரி வருமானம் போதுமானதாக இல்லாததால் வரியை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்புடன், சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

000

Related posts: