கடன் தவணை செலுத்துவதற்கு பணக் கையிருப்பு உள்ளது – மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவிப்பு!

பொருளாதாரம் தொடர்பில் பொய்யான பிரசாரங்களை மேற்கொண்டுவரும் பல்வேறு தரப்பினர் நாட்டுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்திவருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
அதேபோல், கடன் தவணை செலுத்துவதற்கும் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கும் நாட்டில் பண கையிருப்பு இருப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை எதிர்க்கொண்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடியை சமாளிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை சுதந்திரமாக நிர்ணயம் செய்ய அனுமதிப்பது உள்ளிட்ட உடனடி நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நாளையும் மழை தொடரும்? - வளிமண்டல திணைக்களம்
சட்டவிரோத ஆயுதங்களை களைய விசேட நடவடிக்கை - பொலிஸ் திணைக்களம்!
வெளிநாடுகளில் பரிதவித்த மேலும் ஒருதொகுதி இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!
|
|