கடன் தள்ளுபடிகள் குறித்து எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லை – மக்கள் வங்கி முக்கிய அறிவிப்பு..!

Tuesday, May 16th, 2023

மக்கள் வங்கியின் செயல்படாத கடன் தள்ளுபடிகள் குறித்து சில சமூக ஊடக வலைத்தளங்களில் அண்மையில் பகிரப்பட்ட  கருத்துக்கள் தொடர்பாக, வங்கியின் நிர்வாகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அத்தகைய கருத்துக்களின் எவ்விதமான உண்மைத் தன்மையும் இல்லையென்றும் அந்தக் கருத்துக்களை  திட்டவட்டமாக மறுப்பதாகவும் அறிவித்துள்ளது.

எதிர்காலத்தில் எழக்கூடிய சந்தேகங்களையும் தவிர்ப்பதற்காக, குறிப்பிட்ட சமூக வலைத்தளங்களில்  குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல, கடன்கள் எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்றும் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: