கடன் சுமையை குறைக்க மேற்கு நாடுகள் உறுதி!

இலங்கையின் கடன்சுமையை குறைக்க உதவுவதற்கு அமெரிக்கா, ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் உத்தியோகபூர்வமாக இணக்கம் வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் குறித்த நாடுகளின் தூதுவர்களும் உயர்ஸ்தானிகர்களும் நேற்று (27) நடத்திய பேச்சுவார்த்தையின் போது இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் கடன்சுமை தற்போதைய நிலையில் 8500 பில்லியன் ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 42 சதவீதமானவை வெளிநாட்டுக் கடன்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குறித்த கடன்களை குறைப்பதற்கு, வட்டி குறைந்த கடன்களை ஏற்பாடு செய்வதற்கும் இதற்கு உலக வங்கிக்கு பரிந்துரை செய்யவும் நாடுகளின் ராஜதந்திரிகள் உறுதியளித்துள்ளதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related posts:
ஆளுமையற்ற வடக்கு மாகாணசபையும் பிசுபிசுத்துப்போன விஷேட கூட்டத்தொடரும்!
ஈ- ஹெல்த் அட்டை வழங்க நடவடிக்கை!
கரணவாய் பகுதியில் மினி சூறாவளி - 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிர...
|
|