கடன் அட்டை பாவனையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் செய்தி!

வர்த்தக வங்கிகளினால் கடன் அட்டைகளுக்காக அறவிடப்படும் வட்டி வீதம் நூற்றுக்கு 32 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இவ்வாறு கடன் அட்டைக்காக அறவிடப்படும் வட்டி வீதம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிக்கைகளுக்கமைய 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் இலங்கை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள முழுமையான கடன் அட்டைகளுக்காக 110.27 பில்லியன் ரூபாய் நிலுவை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
அத்துடன் அதிக வட்டி வீதம் காரணமாக கொடுக்கல் வாங்கல்காரர்கள் கடன்அட்டை போன்றவற்றை பயன்படுத்துவதற்கு அச்சப்படுவதாக மத்திய வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
புத்தாண்டு விபத்துக்கள் : 185 பேர் மருத்துவமனையில்!
புதிதாக 160 புகையிரத பெட்டிகள் இறக்குமதி!
காணாமல் போனோர் தொடர்பில் மரண சான்றிதழ் பெறும் திகதி நீடிப்பு!
|
|