கடன்களுக்கு சலுகை வழங்க வேண்டும் – மனித உரிமைகளுக்கான நிலையம் தெரிவிப்பு!
Saturday, March 21st, 2020வர்த்தக கடன்களுக்கு மாத்திரிமின்றி ஏனைய அனைத்து கடன்களுக்கும் சலுகை வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையம் வலியுறுத்தியுள்ளது.
அந்த நிலையம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் சாதாரண கடன்களை பெற்றவர்களுக்கும் சலுகை வழங்கப்பட வேண்டும் என இலங்கை மனித உரிமைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைய, சாதாரண மக்கள் பெற்றுக் கொண்டுள்ள வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகனங்களுக்கான குத்தகை அடிப்படையிலான கொடுப்பனவு, கடன் அட்டை மற்றும் ஏனைய கடன்களுக்கான சலுகைகளும் வழங்கப்பட வேண்டுமென அவர் கோரியுள்ளார்.
ஆறு மாதம் நிவாரண காலம் வழங்கப்படாவிட்டாலும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு நிவாரணக் காலம் வழங்கப்பட வேண்டுமென குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா!
ஜனாதிபதித் தேர்தல் : இதுவரை 2540 முறைப்பாடுகள் பதிவு!
“வெப்ப வலயக் காலநிலை அபிலாஷைகள் தொடர்பான திட்டத்தை COP28 மாநாட்டில் முன்வைத்தார் ஜனாதிபதி ரணில் விக்...
|
|