கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Friday, November 25th, 2022

நாட்டில் மாதாந்த சம்பளம் பெறுபவர்கள் கடனை செலுத்துவதில் சிரமம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுடன் கலந்துரையாடி கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நேற்றையதினம் (24-11-2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் டி. எம். ஜே. வை. பி பெர்னாண்டோ இதனை குறிப்பிட்டுள்ளார்.

வாடிக்கையாளர் ஒருவர் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பணிகளை மேற்கொள்ளாவிட்டால், நிதி வாடிக்கையாளர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts: