கடந்த 24 மணி நேரத்தில் 2,859 கொவிட் தொற்றாளர்கள் நேற்று அடையாளம்!

Monday, May 31st, 2021

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 2 ஆயிரத்து 859 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 849 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஏனையோர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களாவர். இதற்கமைய தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 83 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் ஆயிரத்து 434 பேர் நேற்று குணமடைந்தனர். இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 49 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை தொற்று உறுதியான 32, ஆயிரத்து 186 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது..

Related posts: