கடந்த 24 மணி நேரத்தில் மேலும்2 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்று!

Wednesday, May 26th, 2021

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில்  2 ஆயிரத்து 728 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

இதன்படி நாட்டில் மொத்தமாக கொவிட் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 878 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் நேற்று 28 கொவிட் 19 மரணங்களும் பதிவாகியதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 269 ஆக அதிகரித்துள்ளது.

இதேநேரம் நேற்று அடையாளம் காணப்பட்ட 2 ஆயிரத்து 728 கொவிட் தொற்றாளர்களுடன், புத்தாண்டு கொத்தணி மற்றும் திவுலுபிட்டிய, பேலியகொட, சிறைச்சாலை ஆகிய கொத்தணிகளுடன் தொடர்புடையோரின் எண்ணிக்கை  ஒரு இலட்சத்த 63 ஆயிரத்து 471ஆக அதிகரித்துள்ளது. அதில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களும் உள்ளடங்கியுள்ளனர்.

அத்துடன் பேலியகொடை கொத்தணியில் 82 ஆயிரத்து 785 பேரும், புத்தாண்டு கொத்தணியில் இருந்து 69 ஆயிரத்து 240 பேரும், சிறைச்சாலை கொத்தணியில் இருந்து 5 ஆயிரத்து 681 பேரும், திவுலுபிட்டிய கொத்தணியில் இருந்து  ஆயிரத்து 059 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பினரது புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை  இதுவரையில், வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 4 ஆயிரத்து 175 இலங்கையர்கள் மற்றும் 318 வெளிநாட்டவர்களுக்கும் கொவிட் தொற்றுறுதியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: