கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 1038 பேர் கைது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி அஜித் ரோஹண தெரிவிப்பு

!
நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றத்திற்காக ஆயிரத்த 38 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அவர்களில் அதிகமானோர் குலியாப்பிட்டிய, இரத்தினபுரி மற்றும் மாத்தறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதிமுதல் இதுவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 29 ஆயிரத்து 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
இலங்கைக்கு இயற்கையின் எச்சரிக்கை!
வெடிகுண்டு அகற்றும் படையணிக்கு உயர்ரக நாய்!
கைகலப்பு: கால வரையறையின்றி மூடப்படும் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள்!
|
|