கடந்த 24 மணிநேரத்தில் 762 கொரோனா தொற்று: கொழும்பில் மட்டும் 445 பேர் அடையாளம்!

Saturday, December 12th, 2020

இலங்கையில் கடந்த 24 மணிநேரத்தில் அடையாளம் காணப்பட்ட 762 கொரோனா தொற்று நோயாளிகள் தொடர்பான அறிவிப்பினை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அதில் 445 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 135 பேர் கம்பஹாவை சேர்ந்தவர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இதுவரை கொழும்பு மாவட்டத்தில் 13 ஆயிரத்து 710 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை கம்பஹாவில் 7 ஆயிரத்து 401 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த மாவட்டங்களை விட நேற்றையதினம் களுத்துறையில் 36 பேருக்கும் காலியில் 27 பேருக்கும் கண்டி மற்றும் குருநாகலில் தலா 19 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மேலும் அம்பாறையில் 17 பேருக்கும் இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 09 பேரும் நுவரெலியாவில் 08 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டில் இதுவரை கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 31 ஆயிரத்து 375 ஆக உயர்ந்துள்ளது.

இதில் 22 ஆயிரத்து 831 பேர் குணமடைந்துள்ளதுடன் 8 ஆயிரத்து 397 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 147 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: