கடந்த 24 மணிநேரத்தில் மேலும் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட் தொற்று!

Sunday, July 25th, 2021

நாட்டில் கடந்த 24 மிணித்தியாலங்களில் ஆயிரத்து 737 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது.

அவர்களில் ஆயிரத்து 707 பேர் புத்தாண்டு கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 30 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்களாவர்.

அதனடிப்படையில் இதுவரையிலான மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 94 ஆயிரத்து 850 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 957 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 66 ஆயிரத்து 665 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: