கடந்த 24 மணித்தியாலங்களில் 13 விபத்து மரணங்கள்!

Monday, April 12th, 2021

கடந்த 24 மணித்தியாலங்களுள் 13 விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இவர்களில் 6 பேர் நேற்று இடம்பெற்ற வெவ்வேறு விபத்துக்களில் உயிரிழந்துள்ள அதேவேளை, ஏனைய 7 பேரும் இதற்கு முன்னதாக விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் பயணியொருவரும் அடங்குவதாகவும், அவர் பேருந்து கதவிலிருந்து வீசப்பட்டதால் உயிரிழந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: