கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
Monday, November 1st, 2021இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் 542 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 41 ஆயிரத்து 73ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 5 இலட்சத்து 12 ஆயிரத்து 798 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 14 ஆயிரத்து 532 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஆண்கள் 10 பேரும் பெண்கள் 8 பேரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 743ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சர்வதேச பெண்கள் மகாநாடு யாழ்ப்பாணத்தில் ஆரம்பம்!
தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை!
கொரோனா பரவலின் தன்மையை இலங்கையர்கள் மறந்திருப்பதானது மிகவும் ஆபத்தானது -இராணுவ தளபதி எச்சரிக்கை!
|
|