கடந்த 21 நாட்களில் சமூக மட்டத்திலிருந்து ஒரு நோயாளியும் அடையாளம் காணப்படவில்லை – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!
Thursday, May 21st, 2020இலங்கையில் கடந்த 3 வாரங்களில் சமூக மட்டத்தில் இருந்து ஒரு நோயாளி கூட அடையாளம் காணப்படாத நிலையில் நாட்டில் கொரோனா தொற்று பூரணமாக கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாக சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கூறியுள்ளார்.
மேலும் வைரஸ் தொற்றுக்குள்ளான 580 க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், தற்போதைய போக்கில் பொதுமக்கள் திருப்தி அடைய முடியும் என்று அமைச்சர் கூறினார்.
இதேவேளை கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க இலங்கை கடற்படைக்கு சுகாதார அமைச்சு கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் வெலிசர கடற்படை முகாமில் கொரோனா வைரஸ் பரவுவது குறித்து நான்கு பேர் கொண்ட நிபுணர் குழு விசாரணை நடத்தியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
விசாரணைகளை தொடர்ந்து கடற்படைக்கு கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளதாகவும் வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
|
|