கடந்த 17 நாட்களில் சிறைச்சாலைகளிலிருந்து 7,479 பேர் விடுதலை!

கடந்த 17 நாட்களில் சிறைக்கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் 7,479 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
விடுவிக்கப்பட்டவர்களில் 6,915 சந்தேகநபர்கள் அடங்குவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஏனையோர் சிறைத்தண்டனை பெற்றவர்கள் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள இட நெருக்கடியை குறைக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டத்தின் கீழ், இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சிறைச்சாலை கைதிகள் 74 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனடிப்படையில், சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடைய 3,372 பேர் இதுவரை தொற்றுடன் அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் 6,772 கைதிகளும் 73 அதிகாரிகளும் குணமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது.
Related posts:
|
|